என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வேர்க்கடலை உருண்டை
    X
    வேர்க்கடலை உருண்டை

    வேர்க்கடலையில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க..

    வேர்க்கடலையில் புரதமும், இரும்புச்சத்தும் மிக அதிகம். இரத்த சோகை வராது. வேர்க்கடலையில் இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
    வெல்லம் -  200 கிராம்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

    வேர்க்கடலையுடன் பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி உருண்டை பிடிக்கவும்.

    சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை ரெடி
    Next Story
    ×