search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங்

    ஹோட்டலில் மட்டுமே கிடைக்கும் ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 2
    பால் - 2 கப்
    கஸ்டர்டு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
    சீனி - 10 டேபிள் ஸ்பூன்
    வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிதளவு
    கிஸ்மிஸ் - 25



    செய்முறை :

    ஆப்பிளை தோல் நீக்கி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

    குங்குமப்பூவை சூடான பாலில் ஊற வைத்துக் கொள்ளவும்.

    கஸ்டர்டு பவுடரையும் கால் கப் இளஞ்சூடான பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சர்க்கரை போட்டு கரையும் வரை கலக்கவும்.

    சர்க்கரை கரைந்தவுடன் துருவிய ஆப்பிளை சேர்த்து வேக வைக்கவும்.

    ஆப்பிள் துருவல் வெந்தவுடன் இறக்கி எசன்ஸை சேர்த்து கலந்து வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, கஸ்டர்டு பவுடர் கலவை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    பஜ்ஜி மாவு பதம் வந்தவுடன் வேக வைத்த ஆப்பிள் கலவை, கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும்.

    சிறிது நேரம் கிளறி ஆற வைத்து பரிமாறவும்.

    சூப்பரான ஆப்பிள் கஸ்டர்டு புட்டிங் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×