என் மலர்

  ஆரோக்கியம்

  சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்
  X

  சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வயதானவர்களுக்கு இந்த ஓட்ஸ் குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமானது.
  தேவையான பொருட்கள் :

  ஓட்ஸ் - 1 கப்
  உளுந்து - 1/4 கப்
  புளித்த தயிர் - 1/4 கப்
  கடுகு - 1/4 டீஸ்பூன்
  பெருங்காயம் - 1 சிட்டிகை
  சீரகம் - 1/4 டீஸ்பூன்
  வெங்காயம் - 1
  கறிவேப்பிலை - சிறிது
  கொத்தமல்லி - சிறிது
  பச்சை மிளகாய் - 2
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  செய்முறை :

  * வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  * ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

  * உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

  * ஒரு பாத்திரத்தில் உளுந்த மாவையும், ஓட்ஸ் மாவையும் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து புளித்த தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  * ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக கொத்தமல்லியை சேர்த்து ஓட்ஸ் மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.

  * குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

  * சுவையான சத்தான ஓட்ஸ் குழிப்பணியாரம் ரெடி.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×