என் மலர்

  பொது மருத்துவம்

  உப்பு
  X
  உப்பு

  கோடை காலத்தில் உப்பு ரொம்ப தப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடை காலத்தில் மனதுக்குப் பிடித்த உணவினை சாப்பிடாமல் என்ன வாழ்க்கை என்ற அலுப்பு ஏற்படுகின்றதா? ஆய்வுகள் அதிக உப்பினைப் பற்றி கூறுவது இதுதான்.
  கோடை காலத்தில் நம்ம ஊருக்கு என்று சில உணவு பழக்கங்கள் இருக்கு. பழைய சோறு, சின்ன வெங்காயம், மோர், இளநீர், பதநீர், தர்பூசணி என இதெல்லாம் சரிதான். கூடவே விதம் விதமான ஊறுகாய்கள், வடாம், வத்தல், அப்பளம் இப்படியெல்லாம் விதம் விதமாய் தயாரிப்பதும், உண்பதும் இப்பொழுது தான் அதிகம். இவைகளில் உப்பு அதிகம் என்பதால் (காரம், எண்ணெய் இவை கூடுதல் சமாசாரம்) இதனை இந்த சீசனில் மட்டுமல்ல எந்த சீசனிலும் தவிர்த்து விடுங்கள் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். ஏன் இப்படி? மனதுக்குப் பிடித்த உணவினை சாப்பிடாமல் என்ன வாழ்க்கை என்ற அலுப்பு ஏற்படுகின்றதா? ஆய்வுகள் அதிக உப்பினைப் பற்றி கூறுவது இதுதான்.

  * அதிக உப்பு சிறுநீரக பாதிப்புகளை 30 சதவீதம் கூடுதலாக ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். அதுவும் உயர் ரத்த பிரச்சினை இருந்தால் உப்பு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை படுவேகமாக ஓடி வந்து விடுமாம்.

  மற்றபடி பெரிதாய் எதுவும் இல்லை. சீறுநீரகம் செயல் இழந்தாலும் மாற்று சிறுநீரகம் வைத்துக் கொள்ளலாம்? என்ன கொஞ்சம் அதிகம் செலவு பிடிக்கும். பல லட்சங்கள் ஆகும். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. பல உணவு முறை கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டி இருக்கும். மற்றபடி பெரிதாய் வேரொன்றும் இல்லை.

  * மேலும் அதிக உப்பு எடுத்துக் கொள்வோர்க்கு தொடர்ந்து தலைவலி ஏற்படும்.
  * எடை கூடும்.
  * வயிறு உப்பிசம் ஏற்படும்.
  * ரத்த அழுத்தம் கூடும்.

  இனி ஊறுகாய், அப்பளம் என உப்பு அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மேற்கூறியவைகளை கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புவோமாக.
  Next Story
  ×