
புகைக்கும் பெண்களுக்கு கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி-செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் புகைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புகைபிடிக்கும் நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் என இருதரப்பினருமே புகைபிடிப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். புகைபிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே இதில் முதல் முயற்சியாக இருக்கும்.