
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து பருகலாம். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். சீரக தண்ணீரும் கொழுப்பை கரைத்து தொப்பையை குறைக்கும் தன்மை கொண்டது. ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டிய நீரை பருகலாம்.
சீரக நீருக்கு பசியை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதிகம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
கற்றாழையின் சதைப்பகுதியையும் ஜூஸாக தயாரித்து பருகலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கைப்பிடி அளவு கற்றாழை சதைப்பகுதியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து ஜூஸாக்கி பருகலாம். கற்றாழையில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.
கிரீன் டீ பருகுவது போல கிரீன் காபியும் பருகலாம். அவைகளில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் வயிற்று பகுதியில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.