search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பக்கவாதம்
    X
    பக்கவாதம்

    பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை

    சாதாரணமாக உடலில் பலவீனம், உணர்ச்சி குறைபாடு, பார்வை மங்குதல், பேச்சு மற்றும் மொழி பிரச்சினை, விழுங்குவதில் சிரமம் ஆகியவை பக்கவாதத்திற்கான அடையாளங்கள் ஆகும்.
    மூளைக்கு ரத்த ஓட்டம் தடை பட்டால் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

    மூளையின் ரத்த ஓட்டம் தற்காலிகமாக தடை படுவதால் சிறு பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால் நிரந்தர பிரச்சினை ஏற்படுவதில்லை. உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த பற்றாக்குறை பக்கவாதம் உண்டாகிறது. ரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டால் மூளையில் ரத்த கசிவு பக்கவாதம் உண்டாகிறது.

    மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பான செயல்கள் மற்றும் வேலைகள் உண்டு. ஆதலால் எந்த பகுதியில் ரத்த ஓட்ட பாதிப்பு நிகழ்கிறதோ, அதையொட்டியே பக்கவாத அடையாளங்களும் அமையும். அதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் வெவ்வேறு அடையாளங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதாரணமாக உடலில் பலவீனம், உணர்ச்சி குறைபாடு, பார்வை மங்குதல், பேச்சு மற்றும் மொழி பிரச்சினை, விழுங்குவதில் சிரமம் ஆகியவை பக்கவாதத்திற்கான அடையாளங்கள் ஆகும். இதற்கு பிரைன் ஸ்கேன் எடுக்க வேண்டும். அதை பார்த்த பின்பே வந்த பக்கவாதம் ரத்த குழாய் அடைப்பு அல்லது வெடிப்பு வகையா என்று உறுதி செய்யப்படும். அதற்கு பின்பே அந்தந்த நோய்க்கான சிறப்பு மருத்துவம் தொடங்க முடியும். இதுதவிர ரத்த குழாய் ஸ்கேன், இதயம், ரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

    ரத்தக்குழாய் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு முதல் 4½ மணி நேரம் வரை அடைப்பினை முழுமையாக கரைய வைக்க சிறப்பு மருந்து கொடுக்க முடியும். இதனை த்ரோம்போலிசிஸ் என குறிப்பிடுவோம். இதுவே பக்கவாதத்திற்கான முதன்மை மருத்துவம் ஆகும்.

    பக்கவாதம் அல்லது பக்கவாதத்திற்கு ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் பக்கவாத சிறப்பு ஆஸ்பத்திரிக்கு (சி.டி. ஸ்கேன் வசதி இருக்க வேண்டும்) உடனே அழைத்து செல்ல வேண்டும்.

    மேலும் ரத்த ஓட்டம் தடை படுவதால் மூளை அணு பாதிக்க தொடங்கும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 19 லட்சம் மூளை அணுக்கள் பாதிப்படைகிறது.

    இப்போது ரத்த ஓட்ட அடைப்பினை முழுமையாக கரைய வைப்பதற்கு நாகர்கோவில் கே.பி.ரோட்டில் உள்ள டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நவீன சிகிச்சை மூலம் பக்கவாத பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையலாம். இது முதல் 4½ மணி நேரம் வரை மட்டுமே இந்த நவீன சிகிச்சை அளிக்க முடியும்.

    மேற்கண்ட தகவலை நியூரோலாஜிஸ்ட் டாக்டர் சஞ்சய் பிரதீப் தெரிவித்தார்.
    Next Story
    ×