என் மலர்

  ஆரோக்கியம்

  ரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல
  X
  ரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல

  ரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரத்தகொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கிய மின்மையின் வெளிப்பாடுதான் என ராணிப் பேட்டை சிப்காட் ஜி.கே.மருத்துவமனை டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.
  ரத்தகொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கிய மின்மையின் வெளிப்பாடுதான் என ராணிப் பேட்டை சிப்காட் ஜி.கே.மருத்துவமனை டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

  திருடன் வருகிறான் என்று நாய் குரைத்தால் நாயை அடக்குவீர்களா? அல்லது திருடனை பிடிக்க முயற்சிப்பீர்களா. இதில் நாய் என்பது ரத்த அழுத்தம், திருடன் என்பது காரணிகள்.

  உயர் ரத்த அழுத்தம் பி.பி. என்பது பல்வேறு காரணங்களால் உருவாகும். ஆனால் இது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கியமின்மையின் வெளிப்பாடுதான். ரத்த அழுத்தம் உயர காரணங்கள் இருவகைகளாக பிரிக்கப்படும்.

  பிரைமரி அல்லது எசன்ஷியல் ஹைபர்டென்சன் -95% ,

  செகண்டரி ஹைபர்டென்சன் -5%.

  முதல் வகையின் தமிழாக்கம் தேவையான ரத்த கொதிப்பு என்பது ஆகும். பெயரிலேயே முரண்பாடு இருப்பது புரிகிறதா? இந்த வகைதான் அதிகமாக கண்டறியப்படுகிறது. இதற்கான சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் தான் ரத்த அழுத்தம் (BP) மாத்திரைகள் அதிகம் விற்பனையாகிறது.

  1. Normal BP - 110/70 to 130/80,

  2. Pre hypertension - 131/81 to 140/90,

  3. Hypertension- 140/90 to 160/99,

  4. Malignant hypertension 160/99 and above .

  உண்மையை சொல்ல போனால் பெரும்பாலான

  (2மற்றும் 3) ரத்த அழுத்தத்தை எளிய வாழ்க்கை முறையில் கீழ்கண்டவற்றை பின்பற்றினால் சரி செய்து கொள்ளலாம்.

  1. தினமும் ஆறு முதல் ஏழு மணி நேர தூக்கம்,

  2. ஆரோக்கியமான உணவு (அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள்), குறைந்த உப்பு, சர்க்கரை, இனிப்பு வகைகளை அறவே ஒதுக்குதல்,

  3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி, நடை பயிற்சி, மிதமான ஓட்டம், நீச்சல் அல்லது டென்னிஸ் போன்ற விளையாட்டுகள்,

  4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, சுத்தமான நீர் குடித்தல், காற்றை சுவாசித்தல்,

  5. மன அழுத்தத்தை நீக்க முயற்சிப்பது,

  6. தேவையற்ற மாத்திரைகளை தவிர்த்தல்,

  7. பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்,

  8. மது மற்றும் புகையிலை பொருள்களை தவிர்த்தல்,

  ஒரு வாரம் இடைவெளி விட்டு குறைந்தபட்சம் இருமுறை பரிசோதித்து ரத்த அழுத்தம் அதிகம் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகே அதை சரி செய்யும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ரத்தஅழுத்தம் (பிபி)அறிகுறி. அறிகுறியை சரி செய்யாதீர்கள் காரணத்தை சரி செய்யுங்கள்.

  இவ்வாறு டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×