search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூலத்திற்கு லேசர் சிகிச்சை
    X
    மூலத்திற்கு லேசர் சிகிச்சை

    மூலத்திற்கு லேசர் சிகிச்சை

    உலகத்தில் பெரும்பாலான மக்கள் மூல நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தலைசிறந்த சிகிச்சை முறை லேசர் சிகிச்சையாகும்.
    வேலூர் இந்திரா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் கூறியதாவது:-

    உலகத்தில் பெரும்பாலான மக்கள் மூல நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் அதற்கான முக்கிய காரணங்களாவன:-

    காரமான உணவுகள் உட்கொள்ளுதல், நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், தூக்கமின்மை, நார்சத்து உள்ள உணவுகளை எடுக்காததால் ஏற்படும் மலச்சிக்கல்.

    இப்போது மக்கள் எல்லோருமே துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுவதால் பெரும்பாலான மக்கள் தற்போது இந்நோயினால் அவதிப்படுகிறார்கள். இதற்கு தலைசிறந்த சிகிச்சை முறை லேசர் சிகிச்சையாகும்.

    மூலம் என்றால் என்ன?


    மூலம் என்பது ஆசன வாயில் ரத்தநாளம் வீங்கி ஏற்படும் கட்டி. இதனால் ஆசன வாயில் வலி மற்றும் ரத்தகசிவு ஏற்படும். மலம் கழிக்கும் போது மூலம் வெளியே வரும். இது உண்டாவதற்கான முக்கிய காரணங்கள் அதிகமான காரம் உண்ணுதல், வெளி உணவு அருந்துதல், தொலைதூர பயணம்.

    மூலத்திற்கு லேசரின் பங்கு?

    மூலத்திற்கு அதிநவீன லேசர் முறையில் சிகிச்சை செய்யப் படுகிறது.

    ஆசன வெடிப்பு என்றால் என்ன?

    ஆசன வெடிப்பு என்பது ஆசன வாயில் பின்பகுதியில் ஏற்படும் வெடிப்பாகும். இதனால் மலம் கழிக்கும்போது எரிச்சல், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும்.

    ஆசன வெடிப்பிற்கான லேசர் சிகிச்சையின் பலன் என்ன?


    ஆசன வெடிப்பு வருவதற்கான முக்கிய காரணம் மலச்சிக்கல் ஆகும். இந்த ஆசன வெடிப்பில் மலவாய் இறுகி இருப்பதால் இந்த நவீன லேசர் சிகிச்சை முறையில் பிஷரக்டமி (Laser Fissurectomy) மற்றும் (Laser Sphinc tectomy ) செய்வதனால் அந்த மலவாய் இருத்தல் விரிவடைந்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுத்து பலன் தருகிறது.

    பவுத்திரம் என்றால் என்ன?

    பவுத்திரம் என்பது ஆசனவாய் பக்கத்தில் கட்டிபோல் வந்து ரத்தம் சீழ் மற்றும் ரத்தம் வெளியேறும். இது திரும்ப திரும்ப ஏற்படும் இதனால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டியில் இருந்து சீழ் மற்றும் வலி ஏற்படும்.

    பவுத்திரத்திற்கு லேசர் சிகிச்சை முறையில் பலன் என்ன?

    பவுத்திரம் என்பது ஆசன வாயின் பக்கத்தில் ஒரு கட்டிபோல ஏற்பட்டு அது பழுத்து உடைத்து ஒன்று இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த இடத்தில் ஒரு சிறு மரு போல் நின்றுவிடும். அதற்கு சிகிச்சை செய்யாவிடில் அதிலிருந்து சீழ் மற்றும் ரத்தம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கசியத் தொடங்கும். இந்த பவுத்திரத்திற்கு எங்கள் மருத்துவமனையில் இத்தாலி நாட்டின் லேசர் முறையில் அதிநவீன சிகிச்சை செய்யப்படுகிறது.

    பைலோனைடல் சைனஸ் என்றால் என்ன?

    பைலோனைடல் சைனஸ் (Pilonidal sinus) என்பது ஆசனவாய் மேல்புறம் முதுகுதண்டு முடியும் இடத்தில் ஒரு சிறு கட்டிபோல் உருவாகி சீழ் மற்றும் ரத்தம் அடிக்கடி வெளியேறி உடைந்து புண்ணாகி பின்பு ஆறிவிடும்.

    மூலத்திற்கு சிகிச்சை செய்யாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள்:-

    மலச்சிக்கல் ரத்தபோக்கு அதிகமாக உடம்பில் இருக்கும் ரத்தம் குறைந்து விடுவதால் உடல் சோர்வு, மூச்சு வாங்குதல் மற்றும் இதய கோளாறுகள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    லேசர் சிகிச்சையால் 100 சதவீதம் பின்விளைவு ஏற்படாது. லேசர் சிகிச்சை செய்வதால் மூலம் மற்றும் ஆசன வெடிப்பு 98 சதவீதம் திரும்ப வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

    மூலத்திற்கான காரணங்கள்:


    1. நீண்ட கால மலச் சிக்கல்
    2. நீண்ட நேரம் உட்காந் திருத்தல்.
    3. உடல்பருமன்.
    4. கருத்தரித்தல்
    5. நீண்டகால வயிற்று போக்கு
    6. மலம் கழிக்க சிரமப் படுதல்.
    7.குடும்ப பின்னணி (மரபு வழி)
    8. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுதல்.
    9. காரம் சார்ந்த உணவு முறைகள்.
    10. நார்சத்து குறைந்த உணவு முறைகள்.
    11. அதிகமான வெப்பம் ஏற்படக்கூடிய இடங்களில் வேலை செய்தல்.
    12. தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளாமல் இருத்தல்.

    தவிர்க்க வேண்டியது:

    1.காரமான உணவு வகைகள்
    2.மசாலா உணவு வகைகள்
    3. எண்ணெயில் வறுத்த பொரித்த பொருட்கள்.
    4. மீன், இறால், நண்டு மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகள்.
    5. சிக்கன், மட்டன், முட்டை மற்றும் மாமிச வகைகள்.
    6. பரோட்டா
    7. உணவு விடுதிகள் மற்றும் விழாக்களில் உணவு உட்கொள்ளுதல்.
    8. புகைபிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கம்.
    9.கத்தரிக்காய், முருங்கைக் கீரை, கருவாடு போன்ற உணவு வகைகள்
    10. (Iron) அயன் மற்றும் (Calcium) கேல்சியம் மாத்திரைகள்

    சேர்த்து கொள்ள வேண்டியவை:

    1. நார்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்:- வெண்டைகாய், பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், சுரக்காய், பீர்க்கங்காய்,பூசணிக்காய், பீன்ஸ், அவரை, புடலங்காய், பாகற்காய்

    பழவகைகள்:-

    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா, பலாப்பழம், கொய்யாபழம், சாத்துக்குடி, பப்பாளி.

    கீரை வகைகள்:-


    சிறுக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, முலைக்கீரை, அக்கத்திக்கீரை, பொன்னாங் கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத் தக்காளிக்கீரை, புளிச் சக்கீரை, பன்னக்கீரை

    2. தேவையான அளவு தண்ணீர் ( நாள் ஒன்றுக்கு 3-4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்)

    3. தயிர், மோர் வகைகள்

    4. வேளை தவறாமல் உணவு எடுத்து கொள்ள வேண்டும் (விரதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.)

    5. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .

    மேற்சொல்லப்பட்ட வழிமுறை களை பின்பற்றினால் இந்த வகையான நோய்கள் இல்லாமல் ஆராக்கியமாக வாழலாம் என்பதனை இந்திரா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமடை யாதவர்கள் இங்கு வந்து லேசர் முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு, விழுப்பரம், கடலூர், புதுச்சேரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று பூரண திருப்தியுடன் நலம் பெற்று திரும்புகின்றனர்.

    இவ்வாறு டாக்டர் சங்கர் கூறினார்.
    Next Story
    ×