search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோய்கள் வருவதை தடுக்க கை கழுவுங்கள்
    X
    நோய்கள் வருவதை தடுக்க கை கழுவுங்கள்

    தொற்று நோய்கள் வருவதை தடுக்க கை கழுவுங்கள்...

    பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து நாம் எடுத்து வரும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை அடிக்கடி சரியான முறையில் கைகழுவுவதன் மூலம் அகற்ற முடியும்.

    பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து நாம் எடுத்து வரும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை அடிக்கடி சரியான முறையில் கைகழுவுவதன் மூலம் அகற்ற முடியும். பெரும்பாலான தொற்று நோய்களை எளிய முறையான கைகழுவுதல் மூலம் தடுக்கலாம். கைகள் அழுக்காக இருக்கும்போது, கழிவறையை பயன்படுத்திய பின், உணவை சமைக்க, பரிமாற, உண்ண தொடங்கும் முன், செல்லப் பிராணிகளையும் பிற விலங்குகளையும் தொட்ட பின், வெளிப்புற வேலைகளுக்குப் பின், நோயாளிகளை சந்திக்கும் முன்னும் பின்னும், இருமல், தும்மலுக்குப்பின், குப்பை கூடையை தொட்ட பின், காலணிகளை பாலிஷ் செய்த பின், ரூபாய் நோட்டுகளை எண்ணிய பின்னர் இதுபோன்ற எல்லா காரணங்களுக்காகவும் கைகளை கழுவுங்கள்.

    கைகழுவும் முறையில் முதலில் கைகளை நீரால் நனைக்கவும். போதுமான அளவுக்கு சோப்பிடவும். வலது உள்ளங்கையில் இடது உள்ளங்கையை வைத்து விரல்களைப் பின்னவும், விரல்கள் பிணைந்திருக்க உள்ளங்கைகளை தேய்க்கவும். அழுத்தி கைகளைத் தேய்த்து, எல்லா பகுதிகளையும் கழுவவும்.உள்ளங்கை, மணிக்கட்டு, விரலிடுக்கு, நகத்தை சுற்றி நுரையை தேய்க்கவும். இடது பெருவிரலை வலது உள்ளங்கையால் பற்றி சுழற்றி தேய்க்கவும். இதே போல் மாற்றிச் செய்யவும். வலது கை விரல்களை மடக்கி இடது உள்ளங்கையால் பற்றி முன்னும் பின்னும் சுழற்றியும் பின் மாற்றியும் தேய்க்கவும். கைகளை கழுவியபின்பு சுத்தமான துண்டு கொண்டு துடைக்கவும். இப்போது உங்கள் கைகள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

    அனைவரும் பின்பற்றவேண்டிய கை சுத்தத்திற்கு நகத்தை வெட்டுங்கள். நீளமாக நகம் வளர்க்க விரும்பினால் அழுக்கு சேராமலும் தொற்று பரவாமலும் இருக்கும்படி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். தோல் உலராமல் இருக்க மென்மையான சோப்பை பயன்படுத்துங்கள். கையை உலர்த்த துடைப்பதை விடவும் ஒத்தி எடுப்பது நல்லது. ஈரப்பசை அளிக்கும் லோஷனை பயன்படுத்தலாம். தண்ணீரோ, சோப்போ இல்லாதபோது நீரற்ற சோப்பும் கிருமிநாசினியும் சிறந்த மாற்று. அவை தற்போது திரவ வடிவில் சிறிய பேக்குகளிலும் கிடைக்கின்றன. கழிப்பறையை பயன்படுத்திய பின்னும், உணவை கையாளும் முன்னும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும். சோப்பில்லாமல் வெறும் நீரால் கைகழுவுவதால் அதிக பலன் கிடைக்காது. சரியான முறையில் கைகழுவுவதற்கு சோப்பும் சிறிதளவு தண்ணீரும் போதுமானது. சோப்பால் கைகழுவுதல் என்பது நோய் தொற்றுகளை தடுக்க உதவும் சிறந்த தடுப்புமுறை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
    Next Story
    ×