

வெறும் முடிக்கே இந்த நிலைமை என்றால் அந்த முடியில் தேய்ந்திருக்கும் எண்ணெய், வியர்வை, முடியில் தேய்த்திருக்கும் வேறு மருந்துகள், கெமிக்கல் கலந்த ஷாம்பு, ஹேர் டையில் கலந்திருக்கும் பொருட்கள் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் உணவிலும் கலந்து உங்களுக்கு அருவருப்பை மட்டுமல்ல அழற்சியையும் உண்டாக்கும். நாம் சாப்பிடுகின்ற பொழுது சாதாரணமாக முடி வயிற்றுக்குள் சென்று விட்டால் அது அயல்பொருள் என்பதால் தானாகவே நமது உடல் அதை வெளியேற்றிவிடும். ஆனால் அந்த முடியில் ஏதேனும் தொற்றுக்கள் இருந்தால் அது உடலில் நச்சுக்களை சேர்த்துவிடும்.
அப்படி நம்முடைய உடலில் சேருகின்ற நச்சுப் பொருட்கள் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அப்படி வயிற்றுப்போக்கு ஏற்படுகின்ற பொழுது, அதை நிறுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடக் கூடாது. அப்படி வயிற்றுப்போக்கை நிறுத்த நினைத்தால் முடி வெளியேறாமல் போய்விடும். வயிற்றிலேயே தங்கிவிடும். வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். எனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் உடலுக்குள் செல்லுகின்ற ஓரிரு முடிகள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. வீட்டில் சாப்பிடுகின்ற பொழுது, சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி சாப்பிட்டாலே போதும். முடி உணவோடு வயிற்றுக்குள் போவதை தடுத்துவிட முடியும்.