search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா?
    X
    தந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா?

    தந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா?

    தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவுகள் ஆரோக்கியமானதா என்று அறிந்து கொள்ளலாம்.
    நிறைய முறை தந்தூரி சிக்கன் வித் நாணை நம்மில் பலரும் ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்போம். சப்பிட்டு முடித்ததும், ”அடடே இன்னிக்கு கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டுட்டோமோ?” என பெரும்பாலானோர் ஃபீல் பண்ணியிருப்போம். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல விஷயம்.

    உதாரணமாக தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

    வறுத்த, பொரித்த உணவுகளுடன் ஒப்பிடுகையில், தந்தூரியில் கலோரி மிகவும் குறைவு. பொரித்த உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதுடன், கொழுப்பு மற்றும், பி.பி பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.

    தந்தூரி சிக்கன், மீன் மற்றும் பன்னீர் ஆகியவை அதிக புரோட்டினுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் நமக்குத் தருகின்றன. சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும், தந்தூரி எப்போதும் நமக்கு அட்டகாசமானதொரு உணவாக மாறும்.

    * முடிந்தளவு இதனை வீட்டில் சமைக்க முயற்சி செய்யுங்கள். இதனால் தந்தூரியில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் உயர்வதோடு, ஃப்ரெஷ்ஷாகவும் சாப்பிட முடியும்.

    * மலாய் சிக்கன் டிக்காவை தவிர்த்து, ரெகுலர் சிக்கன் டிக்காவை டிக் செய்யுங்கள். சிலருக்கு தந்தூரியில் சாட் மசாலா சேர்த்து, பட்டர் தீட்டி சாப்பிட பிடிக்கும். ஆனால் பட்டர் பெரும்பாலும் சாச்சுரேட்டர் ஃபேட்டுடன் தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

    * புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சிக்கன் மற்றும் மீன் ஆகியவற்றை தந்தூரியாக செய்து சாப்பிடுங்கள். சிவப்பு இரைச்சியில் அதிகளவு புரோட்டின் சத்து உள்ளது. வெஜிடேரியன் பன்னீரை இதற்கு மாற்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சுத்திகரிக்கப்பட்ட மாவினால் செய்யப்படும் ஓர் உணவு தான் நாண். இதில் நார்சத்தும், கார்போஹைட்ரேட்டும் சுத்திகரிக்கப்பட்டிருக்கும். நம்மை முழுமையடையச் செய்வதற்கும், ஆரோக்கியத்துக்கும் நார்ச்சத்து மிகவும் முக்கியம். அதனால் தந்தூரியை முழுதானிய / பல தானிய சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

    * தந்தூரி சப்பாத்தியுடன் சேர்த்து, காய்கறிகளையும் சாப்பிடலாம். இதனால் உங்களது உணவு சமச்சீராவதோடு, உடலும் ஆரோக்கியமாகும்.
    Next Story
    ×