search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்?
    X
    சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்?

    சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்?

    சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு அறிவியல் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது.

    குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும்.

    இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.

    உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது

    ஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.

    உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
    Next Story
    ×