search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
    X

    குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

    உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளரவிடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
    * குழந்தைகளின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதோடு அவர்களது உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

    * சிரித்தால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும். அழுதால் ஏன் அழுகிறாய்? என்று காரணம் கேட்க வேண்டும். மாறாக குழந்தைகளைத் திட்டுவதோ, அடிப்பதோ கூடாது.

    * குழந்தைகளிடம் அன்பு காட்டுவதால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அதைத் தவிர்த்து அவர்களை உதாசீனப்படுத்தினாலோ, மனதைக் காயப்படுத்தினாலோ அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணம் ஆகிவிடும்.

    * குழந்தைகளைப் பகட்டாகவோ, ஆடம்பரமாகவோ வாழவிடாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

    * நாம் குழந்தையாக இருந்தபோது நமக்குக் கிடைக்காத சந்தோஷம் நமது குழந்தைகளுக்குக் கிடைக்கும் போது அதை நாம் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்பட வேண்டும்.

    * குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். அடுத்தவர் முன் தலைகுனிவதை குழந்தைகள் விரும்புவதில்லை. அதே நேரம் அவர்களிடம் பிழைகள், தவறுகள் இருந்தால் அன்பாக எடுத்துக் கூறி அவற்றைத் திருத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்குத் தோல்விகளையும் சந்திக்கப் பழக்க வேண்டும். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பதோ மிகவும் தவறானது. அத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் சின்னச் சின்ன தோல்விகளையும், தாங்க முடியாமல் முடங்கிப் போவார்கள்.

    * மற்ற குழந்தைகள் போல் நமது குழந்தைகளும் படிப்பில் முன்னேறவில்லை என்று அடிப்பதாலோ, திட்டுவதாலோ, பயன் கிடைத்துவிடாது. அதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், விரக்தி, எரிச்சல்தான் வரும் என்பதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் சாதுரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

    * உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளரவிடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவர்களைக் கட்டுப்படுத்தினால் அச்செயலைச் செய்வதில் எல்லாரையும் விட குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள் என்று மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள்.
    Next Story
    ×