என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம் என்பது எளிய சமாச்சாரம் தான். கீழே கூறப்பட்டுள்ளவைகள் எளிதான முயற்சிகள் தான். இவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.
    ஆரோக்கியம் என்பது எளிய சமாச்சாரம் தான். கீழே கூறப்பட்டுள்ளவைகள் எளிதான முயற்சிகள் தான். இவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.

    * சர்க்கரை சேர்த்த பானங்களை அடியோடு தவிர்த்து விடுவோமே. அநேக கடைகளில் கிடைக்கும் பானங்கள் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டவைகளாகவே இருக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உடல் நலம் கெட இவைகள் முக்கிய காரணம் ஆகின்றன. ஆக இன்றோடு இவைகளை உபயோகிப்பதனை நிறுத்தி விடுவோம். எடை அதிகரித்தல் நீரிழிவு 2ம் பிரிவு பாதிப்பு இவை தடுக்கப்படும். இதே போன்று பழ ஜூஸ் குடிப்பதனை தவிருங்கள். பழங்களை வெட்டி சாப்பிடுங்கள். பழ ஜூஸ் குடிப்பதும் சர்க்கரை அதிகமான பானங்களை குடிப்பது போல் தான்.

    * கொட்டைகள் எடுத்துக் கொள்ளுங்கள் : Nuts எனப்படும் கொட்டைகள் அன்றாடம் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். பாதாம் கொட்டைகள் கால்ஷியம் சத்தும் வைட்டமின் ஈ மக்னீசியம் சத்தும் நார் சத்தும் நிறைந்தவை.

    கொலஸ்டிரால் குறைய உதவுவதால் இதய பாதிப்புகளை வெகுவாய் குறைக்கின்றது. சர்க்கரை நோய் பாதிப்பும் குறைகின்றது. முந்திரி இரும்பு மக்னீசியம் சத்து நிறைந்தது. புற்றுநோய் தவிர்க்கப்படுகின்றது. ஆரோக்கிய இதயம் எலும்புகள் பெறுவர்.

    வால் நட்ஸ் : இதில் ஓமேகா 3 அதிகம் இருப்பதால் இதய பாதுகாப்பு கிடைக்கின்றது. புற்று நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது. வயது மூப்பு காரணமாக ஏற்படும் நோய்கள் குறையும்.

    வேர் கடலை : இதனை கொட்டை வகைகளில் சேர்ப்பதில்லை என்றாலும் இதன் சத்தின் காரணம் கொண்டு இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதிலுல்ளபோலேட் மூளைக்கு மிகவும் நல்லது. இது வைட்டமின் ஈ சத்து மிகுந்தது. இதய பாதிப்பு மிகவும் குறைகின்றது.

    * Fast Food Junk Food இவைகளைச் தவிருங்கள்.

    * 8 மணி நேரமாவது தூங்குங்கள். Quality sleep என்று சொல்வார்கள். அதுபோல் நன்கு ஆழ்ந்த தூக்கம் வேண்டும். முறையான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படுகின்றன. முறையான தூக்கம் இல்லாத 89 சதவீதம் குழந்தைகளுக்கும் 55 சதவீதம் பெரியோர்களுக்கும் அதிக எடை கூடும் பிரச்சசினை ஏற்படுகின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    * குடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

    * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

    * அதிக ஒளியுள்ள இடத்தில் தூங்குவதற்கு முன் இருக்காதீர்கள். இது கண்களுக்கு அதிக சோர்வினை ஏற்படுத்தும். தூக்கம் கெடும் அதிக சோர்வு ஏற்படும்.

    * நீங்கள் காலையோ மாலையோ சிறிது நேரம் கூட இளம் வெய்யிலில் இருக்காதவர் என்றால் மருத்துவ ஆலோசனையோடு வைட்டமின் ஞி3 மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * பழங்கள் காய்கறிகளை அன்றாடம் மூன்று வேளையும் சாப்பிடுங்கள்.

    * புரதம் என்பது தேவையான அளவு அவசியம் வேண்டும். உடலின் வளர்ச்சிக்கும் தேய்மானங்களை சீர்செய்யவும் புரதம் மிக அவசியம். தேவையான அளவு புரதம் இருந்தால் சர்க்கரை அளவு சீராய் இருக்கும். இஇஇஇரத்தக் கொதிப்பு சீராய் இருக்கும்.

    * அன்றாடம் குறைந்தது 20 நிமிடமாவது துரித நடை பயிற்சி செய்யுங்கள்.

    * புகை மது இவற்றினை அடியோடு விட்டு விடுங்கள்.

    * அன்றாடம் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தினை விடுங்கள்.
    வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
    வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனை தேநீராக தயாரித்தும் பருகலாம். வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். வாழைப்பழ தேநீர் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைப்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

    வாழைப்பழ தேநீரில் சர்க்கரை குறைவு. அதனால் நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் சாப்பிடலாம். வாழைப்பழத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது சர்க்கரையின் வீரியம் குறைந்துவிடும். வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியமும், பொட்டாசியமும் தூக்கத்தை மேம்படுத்த உதவும். மேலும் வாழைப்பழத்தில் எல்-டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இது தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றை உருவாக்கும். அதுபோல் டொபமைன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது.

    இது செரோடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மனச்சோர்வு மற்றும் கவலையை குறைக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீர் தவறாமல் குடித்துவருவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம். வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடை குறைவதற்கும் உதவும். பசியையும் கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

    வாழைப்பழ தேநீரில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியமானது ரத்த அழுத்தம் மற்றும் தசை சுருக்கங்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். வாழைப்பழத்தின் தோலில் ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. அவை சருமம் தொடர்பான பொதுவான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    வாழைப்பழ தேநீர் தயார் செய்வது எளிதானது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும். பின்னர் சிறிதளவு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். 
    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரித்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

    குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும்.

    பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

    குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றார்.

    ரோஜாப்பூக்களை வைத்து பேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் பேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
    ரோஜாப்பூக்களை வீணடிக்காமல், அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.  இவ்வாறு ரோஜாப்பூக்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

    ரோஜாப்பூக்களின் இதழ்களை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் போல் செய்து, சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை மற்றும் வறட்சியான சருமத்திற்கு சிறந்தது.

    ரோஜாவின் இதழ்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்து, ஓரளவு அரைத்து, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியம், இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின் பாலில் ஒருமுறை கழுவி, ரோஸ் வாட்டர் வைத்து துடைத்து, பின் முகத்திற்கு இந்த பேக் போட்டு, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    ரோஜா இதழ்களை அரைத்து, அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, காய வைத்து, பின் பாலால் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதனால் முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

    பருக்கள் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ரோஜாவின் இதழ்களை அரைத்து, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், பிம்பின், அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீங்கிவிடும்.

    ரோஜாவை அரைத்து, சந்தனப் பொடியுடன் சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பாலால் முகத்தில் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.
    டயட்டில் இருப்பவர்கள் எப்போதும் ஓட்ஸை கஞ்சி செய்து சாப்பிடாமல் காய்கறிகள் சேர்த்து அடை போன்றும் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    துருவிய கேரட் - அரை கப்
    கோஸ் - அரை கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஓட்ஸ் - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துருவிய கேரட், கோஸ் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இதில் நார்ச் சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொரோனா மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.
    தெற்கத்தி சீமையான திருநெல்வேலியின் அடையாளச்சின்னங்களில் ஒன்று, இருட்டுக்கடை அல்வா!

    மக்களின் நாவு இனிக்க இனிக்க, அந்த அல்வாவை கிளறி கொடுத்த அந்த கடையின் அதிபர் ஹரிசிங் இன்று இல்லை. அவர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் 80 வயதில்....

    அவர் மட்டுமா? அவருக்கு முன்பாக கடந்த மே மாதம் 26-ந் தேதியும், 27-ந் தேதியும் அடுத்தடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 50 மற்றும் 57 வயது கொண்ட இருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

    கொரோனாவின் தற்கொலை பாதை ...

    இப்படி தற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதால்தானோ என்னவோ, கொரோனா வைரசையும் தமிழகம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது போல.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு ஒழிச்சலற்ற பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.

    மனநலம் பாதிப்பு

    அதற்குள்ளே தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குடும்பத்தின் தலைவர்களே மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருவது குடும்பங்களை கதி கலங்க வைத்து வருகிறது.

    மனச்சோர்வால் ஆயிரமாயிரம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்கு தூங்கச்செல்வதற்கு முன் நாளை நாம் நலமுடன் எழுந்திருப்போமா என்ற சந்தேகம் பெரும்பாலான மக்களை சித்ரவதை செய்கிறது.

    கண்ணீரில் கரையும் வாழ்க்கை

    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு புறம் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால், இன்னொரு புறம் அந்த வைரசின் புற விளைவுகள் எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், பொழுதுபோக்கு பூங்காக்களும், திரையரங்குகளும், வணிக வளாகங்களும், விடுதிகளும், உணவகங்களும் மூடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள். கூலித்தொழிலாளிகள் தொடங்கி ஆட்டோ ரிக்‌ஷா தொழிலாளிகள் வரை ஒட்டுமொத்த தொழிலாளர் துறையும் ஓசையின்றி முடங்கிப்போய் விட்டது.

    சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகிப்போக, மிச்சமிருந்த நம்பிக்கையும் பறிபோக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் கண்ணீரில் கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இதுதான் மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.

    பெருகும் அழைப்புகள்...

    சென்னை மனநல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஆர்.பூர்ண சந்திரிகா, “ கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் மனநலத்தை பல விதங்களிலும் பாதித்து இருக்கிறது. இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரையில் 3,632 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்தன. 2,603 பேருக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்கினோம். மாவட்டங்களில் உள்ள எங்கள் மையங்களிலும் எங்கள் சேவை தொடர்கிறது” என்கிறார்.

    சென்னையில் 4 இலக்கத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினந்தோறும் ஏறுமுகம் கண்டு வருகிறது. இது மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் முக்கிய பங்களிப்பாக மாறி இருக்கிறது. இதனால் மனதளவில் தளர்ந்து போகிற மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதற்கு என்று பிரத்யேகமாக ஒரு இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது...

    கொரோனா வைரஸ் தொற்றால் மனச்சோர்வுக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிற நிலையில், சென்னை மாஸ்டர்மைண்ட் பவுண்டேசன் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் கூறும்போது, “உளவியல் கண்ணோட்டத்தில் மன அழுத்தம், பதற்றம், கவலை போன்றவற்றால் பாதிக்கப்படாத ஒரே ஒரு மனிதரைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. ஆளுக்கு ஆள் அதன் பாதிப்பும், பாதிப்பின் தீவிரமும் மாறுபடுகிறது” என்கிறார்.

    இந்த அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு, நாடு முழுவதும் இலவச கவுன்சிலிங் சேவையை தன்னலமற்று வழங்கிக்கொண்டிருக்கிறது.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிற வாய்ப்பை கொண்டுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை பணியில் அமர்த்தாதீர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கிற பெண்களை கொரோனா வைரஸ் தொடர்பான வேலையில் ஈடுபடுத்தாதீர்கள் என்று இந்த அமைப்பு செய்த பரிந்துரையை பஞ்சாப் மாநில அரசு ஏற்று செயல்படுத்தி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த அம்சம்.

    எச்சரிக்கும் நிபுணர்கள்...

    கொரோனா வைரஸ் தொற்றால் மனிதர்களின் மன நலம் இன்னும் மோசமான நிலைக்கு செல்கிற வாய்ப்பு உண்டு என்று மன நல நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இதுபற்றி விரிவாய் சொல்கிறபோது, ஒரு கட்டத்தில் எதற்காக நாம் உயிர் வாழ வேண்டும், தற்கொலை செய்துகொண்டு செத்தால் என்ன என்ற உணர்வுக்கு மக்கள் ஆட்படுவார்கள் என்ற கருத்தை மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் வைக்கிறார்.

    அதே நேரத்தில், “மன நலம் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலோருக்கு மருந்துகள் தேவைப்படாது. நிலைமை மோசமாகி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், கொரோனா வைரசை எப்படி சமாளிப்பது? கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் எப்படி அதை சந்திப்பது? ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபின்னர் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது ? இப்படி 3 கட்ட ஆலோசனை மக்களுக்கு தேவைப்படுகிறது என்று லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் யதார்த்தத்தை உணர்த்துகிறார்.

    மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பது முக்கியம் என சொல்கிற அவர், ஆஸ்பத்திரிகளில் இருக்கிறபோதும்கூட தொற்று நோய் பீதியை ஏற்படுத்தக்கூடும், அது நோயாளிகளை தற்கொலை எண்ணத்துக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரிக்க தவறவில்லை.

    மாநகராட்சி நடவடிக்கை

    கொரோனா வைரஸ் தொற்று பெருகி வருகிற இந்நாளில் மாநகராட்சி நிர்வாகம், கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி வருகிற சூழலில், மக்களின் மனநலம் காக்கவும் வகை செய்திருக்கிறது.

    ஒரு மன நல மருத்துவ நிபுணர், ஒரு ஆலோசகர், ஒரு சமூக சேவகர் என அடங்கிய குழுை-வை மண்டலம் தோறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனை வழங்க களம் இறக்கி உள்ளது.

    கொரோனா பரவல் பீதிக்கு மத்தியில் மன நல மருத்துவ நிபுணர்களையும், ஆஸ்பத்திரிகளையும் நாடுவதற்கு தயங்குகிற மக்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக பல்வேறு அமைப்புகள் தொலைபேசி வழியாக ஆலோசனைகள் வழங்குகின்றன.

    சுகாதார தளமான லைப்ரேட், தற்போது மனநல ஆலோசனைகள் பெறுவதற்காக ஆன்லைன் நோயாளிகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. அதிலும் மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையில் இந்த ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.

    மும்பை, டெல்லி, புனே, ஆமதாபாத், சென்னை, பெங்களூரு என பெருநகர மக்களே இப்படி மன நல பாதிப்புக்கு ஆளானால் கிராமப்புற மக்களின் நிலை என்னாவது என்று எண்ணுகிறபோதே அடிவயிறு கலங்குகிறது.

    எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது. கொரோனாவுக்கும் ஒரு காலம் நிச்சயமாக இருக்கிறது. அது காலமெல்லாம் நம்மோடு இருந்து விடப்போவது இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை மன வயலில் விதையுங்கள். வாழ்க்கை, வசந்தமாகும்.
    கர்ப்ப காலத்தில் போடுவதற்கு தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் உள்ளன. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நினைவில் கொண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று இயலாமல் போனாலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
    பெற்றோர் ஆகப்போகும் தம்பதியருக்குக் கருத்தரிப்பு ஒரு மகிழ்ச்சியான நேரம். அதே சமயம், சிசுவின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுவே சரியான தருணம் ஆகும். மருத்துவரின் நேரம் குறித்த சந்திப்புகள், மருத்துவ பரிசோதனைகள் போன்றவை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், தாய்மார்கள் தங்கள் பிஞ்சு குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது, பிரசவத்திற்கு முந்தைய பயிற்சிகளில் ஈடுபடுவது, மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது, நல்ல தாயாக இருப்பது குறித்த ஆலோசனைகளைப் பெறுவது, தடுப்பூசி தொடர்பான முக்கிய பிரச்சனைகள் போன்றவை அடங்கும். தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் உள்ளன. அவை கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகும் போடப்பட வேண்டியவை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நினைவில் கொண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று இயலாமல் போனாலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள் என வரும் போது, இந்தியாவில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்த விஷயத்தில் ஒரு பெரிய சவாலானது தடுப்பூசிகளின் அணுகல். தடுப்பூசி பாதுகாப்பு தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் பற்றிய அறிவின்மையால் கர்ப்பிணிப் பெண்களிடையே தடுப்பூசி அணுகலைக் குறைக்க வழிவகுக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி புறக்கணிக்கப்பட்ட (குறிப்பாக இந்தியாவில்) தடுப்பூசிகளில் ஒன்றாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த தடுப்பூசி இங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இந்த வகை ஆபத்தை அதிகரிக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைக்கு ஆறு மாத காலம் வரை இது தொடர்கிறது. பிறப்புக்கு பிறகும் குழந்தைகள் ஊட்டச்சத்திற்காகத் தாய்ப் பாலை நம்பியிருக்கிறார்கள்.

    கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குழந்தையைக் கூட பாதிக்கும். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் இவ்வகையான நோய்த் தொற்று தாக்கும் தன்மை அதிகம்.

    2009 - 2010 ஆம் ஆண்டு பரவிய H1N1 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயால், ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் ஐசியு- வார்டில் அனுமதிக்கப்பட்டனர். சாதாரண பெண்களை ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களின் நோய் தாக்கு விகிதமும் இறப்பு விகிதமும் அதிகம் இருந்தன. 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் இன்ஃப்ளூயன்ஸ நோய்த் தொற்று தாக்கும் விகிதம் அதிகம், அதற்கு அடுத்தபடியாக 65வயதுக்கு மேற் உள்ள முதியவர்களுக்கு இந்நோய்த்தொற்று தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    தாய் மற்றும் குழந்தையைப் பாதிக்கும் தொற்று நோய்களைத் தடுக்க இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். குழந்தைகள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நம்பியிருக்கிறார்கள். 1960ம் ஆண்டில்,கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தடுப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்குழு (ACIP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, பெண்கள் கர்ப்பத்தின் போது எல்லா காலகட்டத்திலும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன.

    கர்ப்ப காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தடுக்க இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப் பிரசவம், மற்றும் எடை குறைந்த குழந்தை பிறப்பு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால்தான், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் காய்ச்சல் பருவங்கள் வேறுபடுகின்றன. தடுப்பூசி தொடர்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோனைப் பெறுவது நல்லது. அதே சமயம், நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றெடுத்திருந்தாலோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்காத ஒரு நபராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவும். மேலும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபாடிகளையும் வழங்க முடியும்.

    ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கான சரியான வழிமுறைகளைப் பெறுவது முக்கியம். இதுபோன்ற தடுப்பூசிகளின் அவசியம் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள். குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்று கேட்டுப் பலனடையவும்.

    இந்த தகவல்களை வழங்கியவர் மருத்துவர். சுமா நடராஜன் MBBS, DGO, MD - Obstetrics & Gynaecology. இவர் இந்த துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ளார். 
    “செர்விகள் ஸ்பாண்டலிசிஸ்“ என்ற கழுத்தெலும்பு தேய்மானம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    “செர்விகள் ஸ்பாண்டலிசிஸ்“ என்ற கழுத்தெலும்பு தேய்மானம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலரின் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது. கழுத்தெலும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தால் இது ஏற்படுகிறது.

    கழுத்தில் 2 எலும்புகளுக்கு இடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக்கொள்ளும். இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்தில் இருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப்படலாம். இந்த நேரங்களில் கை மட்டுமல்லாமல் காலும் பாதிக்கப்படலாம். தினமும் இவ்வாறு கழுத்தை தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படலாம். அதிக வேலைப்பளு உள்ளவர்கள், விளையாட்டில் அதிக கவனம் செலுத்துபவர்களை இது பாதிக்கலாம். வயது ஆகஆக இது அதிகரிக்கும். 60 வயது ஆகும் போது அனைவருக்குமே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால், கழுத்தெலும்பு தேய்மானம் காணப்பட வாய்ப்பு உண்டு.

    இது அல்லாமல் வேறு சில காரணங்களாலும் கழுத்தெலும்பு தேய்மானம் ஏற்படலாம். அதிகமாக உடல் பருமன், உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது, கனமான பொருட்களை தூக்குவது, கழுத்தை அடிக்கடி முன்பின் அசைப்பது, வளைப்பது, கழுத்தில் அடிபடுவது, சிறு வயதில் அடிபட்டு கவனிக்காமல் விட்டுவிடுவது, கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கிற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர் வருவது, கழுத்தில் கனத்தன்மை குறைகிற நோய் தோன்றுவது போன்றவை அந்த காரணங்கள்.

    இந்த நோய்க்கான அறிகுறிகள் மெதுவாக தோன்றும். சில நேரம் திடீரென்று கடும் வலியை உண்டாக்கும். வலி லேசானதாகவோ, கடுமையானதாகவோ இருக்கும். கழுத்தை அசைக்க முடியாமல் போகும். கை தசைகளில் பலம் குறையும். கையை தூக்குவதில் சிரமம் ஏற்படும். துணியை பிழிவதில் சிரமம் ஏற்படும். கைகளில் தசைகள் இறுகிப் போகும். கைகளில் மரத்துப் போகும் தன்மை ஏற்படும். சிலருக்கு தலைவலி ஏற்படலாம். நடக்கும்போது தள்ளாட்டம் வரலாம். பதற்றமான சூழ்நிலைகளில் சிறுநீர், மலம் கட்டுப்பாடின்றிப் போகும். தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறு வரும்.
    கடந்த காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.
    தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூக பிரச்சினையாக பார்க்கப்படுவது உண்மை. கடந்த காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கருங்கல் அன்னை டெஸ்ட் டியூப் பேபி மையம், குழந்தையின்மை சிகிச்சையில் முத்திரை பதித்து வருகிறது என மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரும், ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவருமான டாக்டர் சுதா கூறினார். மேலும், அவர் கூறுகையில் ஆய்வுகூட சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கருமுட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கை முறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.

    இவ்வாறு கருமுட்டையுடன் விந்தை இணைத்து செயற்கையாக உருவாக்கப்படும் கருவை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்க முறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து, அப்பெண் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக குழந்தை பெற்று கொள்வதில் ஆர்வம் இருந்தும், இயற்கையாக சில சிக்கல்களை கொண்டிருக்கும் தம்பதிக்கு இம்முறையினால் குழந்தை பெற்று கொள்ள உதவலாம்.

    இம்முறையால் பிறக்கும் குழந்தையை பொதுவான பேச்சு வழக்கில் ‘சோதனைக்குழாய் குழந்தை‘ என அழைப்பார்கள். உயிரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்த கருத்தரிப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் 5 சதவீதம் என கனடாவில் உள்ள அமைப்பு ஒன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் நடந்த கருத்துக்கணிப்பின் படி இந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டலை முயன்று பார்த்த பின்னர் 40 விழுக்காடு தம்பதிகள் இந்த பரிசோதனை முறையின் போதும், மேலும், 26 விழுக்காடு தம்பதிகள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையை பெறுகின்றனர்.

    எமது மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சிகிச்சைக்கு வரும் அதிகபடியான பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ. சிகிச்சை அளித்து கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. இந்த வகையில் எமது மருத்துவமனையில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். மேலும், பிற கருத்தரித்தல் மையங்களை விட குறைந்த கட்டணத்தில் அன்னை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
    வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரித்து, அதைக் கொண்டு தலை முடியை அலசினால், மயிர் கால்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும். இங்கு தலை முடி உதிர்வை தடுக்கும் நேச்சுரல் ஷாம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    தலைமுடி வளர்வதில்லை என்று ஏங்குவோர் பலர். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஷாம்பு, கண்டிஷனர்களில் உள்ள கெமிக்கல்களால் தலை முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, தலைமுடி உதிர்கிறதே தவிர வளர்வதில்லை.  இருப்பினும் வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரித்து, அதைக் கொண்டு தலை முடியை அலசினால், கெமிக்கல்களால் மயிர் கால்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும். இங்கு தலை முடியின் வளர்ச்சியை வேகமாக்கும் ஓர் நேச்சுரல் ஷாம்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் சோடா - 3 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 9 டேபிள் ஸ்பூன்

    பயன் படுத்தும் முறை:

    பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு நீளமான முடி உள்ளவர்களுக்கு தான். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவையும், நீரையும் எடுத்து கலந்து பயன்படுத்துங்கள்.

    பின்பு 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 4 பங்கு நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் வாசனைமிக்க எண்ணெய் எதையேனும் சேர்த்து தலைமுடியை அலச வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது, கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்த முறையின் போது, நுரை ஏதும் வராது. ஆனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் தரம் அதிகரித்திருப்பதுடன், தலை முடியின் வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    நீங்கள் வாங்கியுள்ள ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் தலைமுடியை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், ஷாம்புவை நீரில் கலந்து, அதோடு சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், பொடுகு உடனே நீங்கி, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
    வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    தண்ணீர் - 2 கப்
    வாழைப்பழம் - 1
    லவங்கப்பட்டை - சிறிய துண்டு
    டீ தூள் - 1 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்

    வாழைப்பழ தேநீர்

    செய்முறை

    அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.

    கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போடவும்.

    பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும்.

    பின்னர் சிறிதளவு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

    பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஊரடங்கு காரணமாக வீட்டு சிறையில் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு ‘வெளியே சென்றால் கொரோனா பூதம் வந்துவிடும்’, என பெற்றோர் பயமுறுத்தி வைத்துள்ளனர். இதனால் காரணம் தெரியாமலேயே அடிக்கடி கை கழுவி கொள்கிறார்கள்.
    கொரோனா எனும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் காரணமாக உலக நாடுகளே பீதியில் உறைந்து போயிருக்கின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் புரையோடி கிடப்பதால் மக்கள் அனைவரும் பயம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறவே யோசிக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது.

    ஊரடங்கு காரணமாக குழந்தைகள் தங்களின் சந்தோஷத்தை பறிகொடுத்து விட்டார்கள் என்றால் அது மிகையல்ல. பட்டாம்பூச்சிகள் போல சிறகடித்து விளையாடி மகிழவேண்டிய குழந்தைகள் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடாதவாறு பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் விளையாட்டுகள் இல்லாமல் தெருக்கள் அமைதியாக காட்சியளிக்கின்றன.

    முன்பெல்லாம் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும்போது, ‘பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்‘, என்று பயமுறுத்தி தாய்மார்கள் சோறு ஊட்டினார்கள். இப்போது எங்கு திரும்பினாலும் கொரோனா எனும் வார்த்தையே பயத்துடன் எதிரொலிக்கின்றன. டி.வி.க்களிலும் நிமிடத்துக்கு ஒருமுறை கொரோனா எனும் வார்த்தை இடம்பெறுகிறது. இதனால் ‘கொரோனா என்றால் என்னம்மா?‘ என்று குழந்தைகள் கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

    இதையடுத்து குழந்தைகளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று குழம்பும் பெற்றோர் ஒருவழியாக, ‘கொரோனா ஒரு பூதம். வெளியே போய் விளையாடினா புடிச்சிட்டு போயிடும்’, என்று பயமுறுத்தி விடுகிறார்கள். மேலும் ‘பூதம் வராம இருக்கணும்னா அடிக்கடி இந்த மருந்த (சானிடைசர்) ஊத்தி கை கழுவனும்‘, என்றும் சொல்லி கொடுக்கிறார்கள். இதனால் கொரோனா என்பது பூதம் என்று குழந்தைகள் அடிமனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது.

    இதனால் துள்ளி திரிய வேண்டிய காலத்திலும் கொரோனா பயம் காரணமாக சுட்டி குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே அடிக்கடி சானிடைசர் ஊற்றியோ, சோப்பு போட்டோ கைகளை நன்றாக கழுவி கொள்கிறார்கள். இதனால் டி.வி.க்களே கதியென வீட்டுக்குள்ளேயே இருந்து விடுகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் வெளியே செல்வதை காட்டிலும், வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு என்பதால் பெற்றோர் இந்த நடைமுறையை கையாண்டு வருகிறார்கள்.

    என்னதான் டி.வி.க்களில் நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று பொழுதை கழித்தாலும், வீட்டு வாசலில், தெருக்களில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வதே தனி சுகம்தான். அந்த சுகத்தை மீண்டும் எப்போது அனுபவிப்போம் என்ற ஆசையில் குழந்தைகளும் இருப்பதை மறுக்க முடியாது. காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
    ×