என் மலர்

  வழிபாடு

  உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் இன்று தேரோட்டம்
  X

  உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் இன்று தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று இரவு 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனி நடக்கிறது.
  • இன்று 2 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடைபெறுகிறது.

  நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  விழா நாட்களில் பணிவிடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், நாதஸ்வர கச்சேரியும், அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நிகழ்ச்சியும், இந்தியாவின் ஆன்மீக அருளிசை கச்சேரியும், சமூக நாடகமும், திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  திருவிழாவின் 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 12.00 மணிக்கு பணிவிடையும், உச்சிப்படிப்பும் மாலை 3 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், 5 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும் நடைபெற்றது.

  9-ம் திருவிழாவான நேற்று மாலை 4 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு அன்னதர்மமும் இரவு 8 மணிக்கு உடையப்பன் குடியிருப்பு அகிலம் கலா மன்றத்தாரின்18 வது படைப்பான இதுவும் நியாயம்தானா? என்னும் சமூக நாடகம் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு அன்னதர்மமும், இரவு 8 மணிக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் முபிதாவுடன் இணைந்து திரைப்பட பின்னணிப் பாடகி விஜிதா சுரேசாம் ன் யுவர் சாய்ஸ் -ன் மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ஆம் திருவிழாவான இன்று (27-ந்தேதி) நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும் மாலை 3 மணிக்கு மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம், நாதஸ்வரத்துடன் ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல தெய்வத்திரு டாக்டர் எஸ். லெட்சுமணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் பணியின்போது மோர் தர்மமும், பழதர்மமும் கோயில்விளை சந்திப்பில் வைத்து மாபெரும் அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருத்தேர் திருக்கோவில் முன் வந்து சேருகிறது. இரவு 7.30 மணிக்கு அன்னதர்மமும், 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், இரவு 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும். 2 மணிக்கு திருக்கொடியிறக்கமும், அதனைத் தொடந்து இனிப்பு வழங்குதல் நடை பெறுகிறது.

  திருத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், உப தலைவர் சந்திரசேகர், செயலாளர் துரைச்சாமி, இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் உதயகுமார், துணைப் பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்ள் கிருஷ்ணமணி, நாராயணப்பெருமாள், மணிகண்டன், ஸ்ரீதர், நாராயண மணி, ராஜேஸ்வரன், சுரேந்திரன், தங்கலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

  Next Story
  ×