search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவணி திருவிழா: வெள்ளை-பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
    X

    சுவாமி சண்முகர், வள்ளி தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த காட்சி.

    ஆவணி திருவிழா: வெள்ளை-பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

    • இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் காலையிலும் மாலையிலும் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளைமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×