search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குன்றத்துகுமரன், பாண்டிய மன்னனாக முருகப்பெருமான் மதுரைக்கு 5-ந்தேதி புறப்படுகிறார்
    X

    குன்றத்துகுமரன், பாண்டிய மன்னனாக முருகப்பெருமான் மதுரைக்கு 5-ந்தேதி புறப்படுகிறார்

    • மதுரை வந்ததும் நால்வர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 10-ந்தேதி வரை மதுரையிலேயே தங்கி நகர்வலம் வருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஆவணி மாதத்தில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழாவின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஆகிய 2 நிகழ்ச்சிகளிலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளுவது வரலாற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலதிருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 6-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது.

    இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்கிறார்.இதற்காக வருகின்ற 5-ந்தேதி கோவிலில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் அருள் ஆட்சி புரியும் பாண்டிய மண்டலமான மீனாட்சி பட்டணத்திற்கு (மதுரை) வருகிறார்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் திருக்கண் அமைத்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன்வழிபடுகிறார்கள். மீனாட்சி அம்மன்கோவிலுக்கு வந்ததும் நால்வர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள் 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பாண்டிய மன்னனாக முருகப் பெருமான் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனை தொடர்ந்து வருகின்ற 10-ந்தேதி வரை மதுரையிலேயே தங்கி நகர்வலம் வருகிறார். பிறகு 10-ந் தேதி மாலையில் பூப்பல்லக்கில் தன் இருப்பிடமான திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டு வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×