search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து நூதன வழிபாடு
    X

    வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து நூதன வழிபாடு

    • இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • பொங்கல் விழாவில் திருமணமான புகுந்த வீட்டுப்பெண்களே கலந்து கொள்ள வேண்டும்.

    தலைவாசல் அருகே நத்தக்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நல்லசேவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விழாவில் பெண்கள் வெள்ளை புடவை அணிந்து பொங்கல் வைத்து நூதன வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்த விழாவில் திருமணமான கிராமப்பெண்கள் நகை எதுவும் அணியாமல், வெள்ளை நிற ஆடை அணிந்து பொங்கல் வைத்து நூதன வழிபாட்டில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பொங்கல் விழாவில் திருமணமான புகுந்த வீட்டுப்பெண்களே கலந்து கொள்ள வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்பு பொங்கல் வைக்க வேண்டும்.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ந் தேதி சக்தி அழைத்தல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி நத்தக்கரை கிராமத்தில் பூஜை பொருட்கள் கூடையுடன் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு 500-க்கும் ேமற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் நகைகள் உள்பட அணிகலன்கள் அணியாமல் வெள்ளை புடவை அணிந்து, பொங்கல் வைத்து நூதன வழிபாடு நடத்தினர்.

    மேலும் போலீஸ் சீருடையில் வந்த பூசாரி 700-க்கும் மேற்பட்ட கிடா, சேவல், கோழிகளை பலியிட்டு பூஜை செய்தார். விழாவில் தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை, பெரியேரி, நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி, பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம், விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பி மட்டியைகுறிச்சி ஆகிய கிராம மக்கள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×