என் மலர்

  வழிபாடு

  சின்னணைந்தான்விளை பிச்சைகாலசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
  X

  சின்னணைந்தான்விளை பிச்சைகாலசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மார்ச் 17-ந் தேதி கொடை விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
  • வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

  நாகர்கோவில் அருகே உள்ள சின்னணைந்தான்விளை பிச்சைகாலசாமி கோவிலில் கும்பாபிஷேகவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 7 மணிக்கு நவக்கிரக கலச பூஜை, 9 மணிக்கு சங்குதுறை கடற்கரையில் இருந்து சிங்காரி மேளம் முழங்க புனிதநீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும் ஆகியவை நடக்கிறது.

  விழாவின் 2-ம் நாளான நாளை(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும், இரவு 9 மணிக்கு எந்திர ஸ்தாபனம், இரத்தின நியாசம், சிலை பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

  3-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் சிற்றுண்டி வழங்குதல் நிகழ்ச்சி, 8 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும், 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் விமான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனை ஆகியவை நடைபெறுகிறது.

  கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மூத்த வக்கீல் பாலகணேசன், வக்கீல்கள் பூர்ணிமா, ஆர்தர்பாரத், சங்கரசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

  கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், குடும்பத்தார்கள் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர். நண்பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம மாத்ரு சக்தி பூஜை, இரவு 9 மணிக்கு உதயகீதம் இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.

  கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களும் மண்டல பூஜையை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு மேல் பஜனை, தீபாரதனை, சிறப்பு அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி கொடை விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

  கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பிச்சைகாலசாமி கோவில் நிர்வாகக்குழு தலைவர் அய்யப்பன், செயலாளர் பிரதீஷ், பொருளாளர் சந்திரகுமார், துணைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் மோகன், கணக்காளர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.

  Next Story
  ×