search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் வரலாற்றை பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் வரலாற்றை பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு

    • ரூ.8½ லட்சத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
    • அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழாக்கள் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைகாட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒளிரப்பு நேற்று மாலை முதல் தொடங்கியது. இதனை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார், ஐயப்பன், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் தல வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் கோவில் பணியாளர்கள் 3 பேரை சுற்றுலா வழிகாட்டியாகவும் திருக்கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது.

    இதற்கிடையே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×