என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சதுரகிரியில் ஒரு வாரம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பிரதோஷம், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:- சதுரகிரி கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் போதுமானதாக இல்லை. எனவே 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 3 நாட்கள் அனுமதி அளித்து ஒரு வாரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.