search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலை நெய் தேங்காய் தத்துவம்
    X

    சபரிமலை நெய் தேங்காய் தத்துவம்

    • இருமுடி கட்டும் தினத்தன்று குருசுவாமி நெய் தேங்காயை வைத்துப் பூஜை செய்வார்.
    • நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின் பிரசாதமாக கொடுக்கப்படும்.

    ஐயப்பனை வழிபட கொண்டு செல்லும் தேங்காயின் ஒரு கண்ணில் துவாரம் போட்டு அதன் மூலம் இளநீரை அகற்றி காயவைக்க வேண்டும். இருமுடி கட்டும் தினத்தன்று குருசுவாமி இந்த தேங்காயை வைத்துப் பூஜை செய்வார்.

    பின்பு அவர் ஒவ்வொரு ஐயப்பனையும் கூப்பிடு வார். "ஐயப்பன்மார்" அத்தேங்காயைப் பிடித்துக் கொண்டிருக்க அத்துவாரத்தின் வழியே சுத்தமாகக் காய்ச்சிய பசும் நெய்யை "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று கூறிக்கொண்டே விடுவார். மலைக்குச் செல்லுபவர் தாய், தந்தை மற்றும் உறவினர்களும் இதில் ஆளுக்குக்கொஞ்சம் நெய் விடலாம்.

    அத்தேங்காய் நிரம்பியதும் கார்க்போட்டு அடைத்து எல்லா நெய்த் தேங்காய்களையும் வைத்து பூஜை நடைபெறும். தேங்காய் மேல் ஓடுதான் நம் உடம்பு, அதில் விடப்படும் நெய் நம் உடலிலுள்ள உயிர். இந்த உயிரான நெய்யை பத்திரமாக எடுத்துச் சென்று அய்யனின் காலடியில் சமர்ப்பித்து முழு சரண் அடைந்து விட்டோம் என்பது இதிலுள்ள தத்துவம், நெய் அபிஷேகம் முடிந்த பின் அந்த தேங்காயை கணபதி சன்னதி எதிரில் கொழுந்துவிட்டு எரியும் ஹோம குண்டத்தில் எறிவார்கள்.

    அதாவது நம்முடைய உயிரை அந்த இறைவனுக்கும் உடலை நெருப்புக்கும் அர்ப்பணிக்கும் தத்துவம் தான் இதில் அடங்கியுள்ளது. இந்த நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின் பிரசாதமாக கொடுக்கப்படும். இதற்கு ஈடு இணையுள்ள மருந்து எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட வியாதியோ அல்லது கெடுதலோ இருந்தாலும் ஐயப்பன் பெயரைச் சொல்லி இதை உட்கொண்டால் அவை எல்லாம் குணமாகி விடும்.

    Next Story
    ×