search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    • திருவிழா நாளை முதல் 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • திருவிழா நாளை முதல் 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    திக்கணங்கோடு அருகே உள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா வருகிற நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    6-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையுடன் 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கி கொடியேற்றி, மறையுரையாற்றுகிறார். பங்குத்தந்தை ஜஸ்டின் பிரபு முன்னிலை வகித்தார். 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரத்தினம் தலைமை தாங்குகிறார்.

    11.30 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது மாலை 6.30 மணி திருப்பலிக்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயரும், குழித்துறை மறை மாவட்ட திருத்தூதரக நிர்வாகியுமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 8-ந்தேதி மாலை 6.30 மணி திருப்பலிக்கு மாத்திரவிளை வட்டார முதல்வர் மரியவின்சென்ட்டும், 9-ந்தேதி மாலை திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்குகிறார்கள். மறைமாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார்.

    13-ந்தேதி மாலை 6:30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட நிதி பரிபாலகர் அகஸ்டின் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    14-ந்தேதி காலை 8:30 மணிக்கு முதல் திரு விருந்து திருப்பலிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணி ஆடம்பர மாலை ஆராதனைக்கு பள்ளியாடி பங்கு தந்தை பெனடிக்ட் அனலின் தலைமை தாங்குகிறார்.

    இரவு 8.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. 15-ந்தேதி காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தின விழா, ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இதற்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார். 11 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜஸ்டின் பிரபு, இணை பங்கு தந்தை சகாய ஜோபின், பங்கு பேரவை உதவி தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ், ஜோண் ஆப் ஆர்க் ஜோஸ், இணைச்செயலாளர் கிறிஸ்துதாஸ், பொருளாளர் செல்லம், பங்குமக்கள், பங்குபேரவை, அருட்சகோதரிகள், பக்த சபைகள் ஆகியோர் இணைந்து செய்கிறார்கள்.

    Next Story
    ×