search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் கால்நாட்டு விழா
    X

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் கால்நாட்டு விழா

    • இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.
    • இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கால்கோள் நாட்டு விழா கோவில் வளாகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மேயர் மகேஷ், அவருடைய மனைவி மேகலா மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது.

    அதன்பிறகு பகல் 1 மணிக்கு தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும், மீண்டும் இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேலு மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×