search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவணி மூலத்திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் காட்சி அளித்த சுந்தரேசுவரர்
    X

    ஆவணி மூலத்திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் காட்சி அளித்த சுந்தரேசுவரர்

    • பிரியாவிடை சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். அதன்படி ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களில் குறிப்பிடத்தக்க 12 லீலைகளை விளக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று நரியை பரியாக்கிய லீலை நடந்தது. சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று காலை பிரியாவிடை சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். அதன்பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளினர்.

    சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல், பழைய சொக்கநாதர் கோவில், திருமலைராயர்படித்துறை ரோடு, பேச்சி யம்மன்படித்துறை, ஒர்க்‌ஷாப் ரோடு வழியாக ஆரப்பாளையம் வைகை தென்கரையில் உள்ள புட்டுதோப்பு மண்டபத்துக்கு வந்தடைந்தது.

    வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் புட்டு தோப்பு மண்டபத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் புட்டுதோப்பு மண்டபத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. சுவாமி-அம்மன் கோவிலுக்கு திரும்பியபின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்.

    Next Story
    ×