என் மலர்

  வழிபாடு

  ஆடி அமாவாசை: மேட்டூர் காவிரியில் திரண்டு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
  X

  மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த காட்சி

  ஆடி அமாவாசை: மேட்டூர் காவிரியில் திரண்டு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.
  • பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

  ஆடி அமாவாசை நாளில் நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் நீர் நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அப்படி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.

  அதன்படி இன்று காலை முதலே நீர் நிலைகளில் திரண்டு பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதையொட்டி சேலம் மாவட்டத்தில் முக்கிய ஆறான மேட்டூர் காவிரி புதுப்பாலம் மற்றும் பழைய பாலப்பகுதிகளில் இன்று காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். பின்னர் வாழை இலையில் அரிசி மாவில் பிண்டம் செய்து, நெல், தேங்காய் பழங்கள் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

  மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தற்போது 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. காவிரி தணணீரில் நீராடிய பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

  இதையொட்டி மேட்டூர், பூலாம்பட்டி உள்பட சேலம் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்த படியே இருந்தனர்.

  சேலம் மாவட்டத்தில் முக்கிய நதிகளான வஷிஷ்ட நதி, சரபங்கா நதி மற்றும் சேலம் மூக்கனேரி, சுகவேனேஸ்வரர் கோவில், அணை மேடு உள்பட பல பகுதிகளிலும் பொது மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

  Next Story
  ×