என் மலர்

  வழிபாடு

  ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு திருக்கல்யாணம்
  X
  ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு திருக்கல்யாணம்

  ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு திருக்கல்யாணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி, பூதேவிக்கு மாங்கல்ய தானம் செய்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  துறையூர் அருகே உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடாஜலபதி துறையூரில் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதிக்கு விஜயம் செய்வார்.

  மறுநாள் அவிட்ட நட்சத்திரத்தன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வைகாசி அவிட்ட நட்சத்திர நாளான நேற்று பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு துறையூர் வேணுகோபால சுவாமி சன்னதியில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி, பூதேவிக்கு மாங்கல்ய தானம் செய்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×