என் மலர்

  வழிபாடு

  சென்னை காரப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
  X
  சென்னை காரப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

  சென்னை காரப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரப்பாக்கம், திரவுபதி அம்மன் கோவில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, கோவி லில் நடந்த தீ மிதி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
  ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் பகுதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு தினமும் பூஜை நடத்தப்படுகிறது.

  காரப்பாக்கம் சுற்று வட்டார பகுதிமக்கள், இந்த கோவிலுக்கு செல்கின்ற னர். போதிய பராமரிப்பு இல்லாததால், பெரிய அள வில் விழாக்கள் நடைபெற வில்லை. இந்நிலையில், 2011ம் ஆண்டு, ஊர் மக்கள் ஒன்று கூடி, அறங்கா வலர் 198வது வார்டு மாமன்ற உறுப்பினர் லியோ என்.சுந்தரத்தின் தலைமையில் கோவில் கட்டி திரவுபதி அம்மன் போதிராஜா சிலையும், கொடி மரமும் அமைத்தனர். தினமும், திரவுபதியம்மன், போதிராஜாவுக்கு அபிஷேகம் நடைபெற்று வந்தன.

  ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, கோவிலின் வடக்கு பக்கம் நவக்கிரக சிலைகள், நாக ராஜா, நாகராணி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வன்னி மர விநாயகரும் உள்ளார்.மாதந்தோறும் அமாவாசை யன்று, சிறப்பு பூஜை நடைபெறும்.

  இந்நிலையில், கோவிலை புதுப்பித்து, முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த மாதம் 21ந்தேதி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகம், தீ மிதி உலா, படுகள காட்சி, திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தீ மிதிக்கு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம், படுகள காட்சி, மகாபாரத நாடகம் நடந்தது. இரவு நடந்த, தீ மிதி விழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

  இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று, தருமனுக்கு திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம், அன்னதா னம் விமரிசையாக நடந்தது.

  விழா ஏற்பாடுகளை அறங்காவலர் 198வது மாமன்ற உறுப்பினர் லியோ என்.சுந்தரம் மற்றும் விழா குழுவினர், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×