என் மலர்

  வழிபாடு

  அவினாசி லிங்கேசுவரர் கோவில்
  X
  அவினாசி லிங்கேசுவரர் கோவில்

  அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி 9-ந்தேதி இரவு நடக்கிறது.
  அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை சிறப்பு பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. விழாவை தொடர்ந்து 6-ந்தேதி சூரிய மண்டல சந்திர மண்டல காட்சிகள், 7-ந்தேதி பூதவாகன அன்ன வாகன காட்சிகள் 8-ந்தேதி கைலாசவாகனம், புஸ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி 9-ந்தேதி இரவு நடக்கிறது. இதையடுத்து 10-ந்தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் யானை வாகன காட்சி நடக்கிறது. 11-ந்தேதி சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

  12-ந்தேதி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று தேர்வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. 13-ந்தேதி அம்மன் தேர் சிறிய தேர் இழுக்கப்படுகிறது.
  Next Story
  ×