என் மலர்

  வழிபாடு

  ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை
  X
  ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை

  கோட்டை பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10-ந் தேதி ஸ்ரீ ராமநவமி உற்சவம் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் நேற்று ராமநவமி நிறைவு விழா நடந்தது.

  இதையொட்டி காலையில் மூலவர் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நவகலச பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

  பின்னர் ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலையில் உற்சவர் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் திருவீதி உலா வந்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
  Next Story
  ×