
நேற்று காலை 7 மணிக்கு காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி பூஜை செய்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
மேலும் சில பக்தர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் மதியம் 12 மணிக்கு சவுடேஸ்வரி அம்மனுக்கு தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு தீபஜோதி நிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.