
இதனை தொடர்ந்து, அம்மன் முகம் தேரில் வீதி உலா வந்து நள்ளிரவு 1 மணிக்கு மேல் அம்மன் முகம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது. 10-ம் நாளான மார்ச் 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) மகாசிவராத்திரி அன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.
இதனை தொடர்ந்து 1-வது காலம் பூஜை இரவு 9மணிக்கும், 2-வது கால பூஜை இரவு 11 மணிக்கும், 3-வது கால பூஜை இரவு 12 மணிக்கும், அம்மன் தேரில் வீதி உலா நிகழ்ச்சியும், இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு 4-வது கால பூஜையும் நடக்கிறது. அதன்பிறகு சிகர நிகழ்ச்சியாக தாமிரபரணி ஆற்றுக்கு சென்று நீராடி புனித நீர் புதுக்குடங்களில் எடுத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று மூலஸ்தானத்தில் அம்மன் முன்பு சிறப்பு பூஜைகளுடன் அம்மன் முன்பு அழகு நிறுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும்.