என் மலர்

  வழிபாடு

  ஆலத்தூர் காருடைய அய்யனார் கோவிலின் முகப்பு தோற்றம்.
  X
  ஆலத்தூர் காருடைய அய்யனார் கோவிலின் முகப்பு தோற்றம்.

  ஆலத்தூர் காருடைய அய்யனார்-வீரனார் கோவில் குடமுழுக்கு 11-ந் தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலத்தூர் காருடைய அய்யனார்-வீரனார் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு விழா வருகிற 11-ந்தேதி நடக்கிறது.
  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் காருடைய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் இக்கோவிலில் அய்யனார், பூரணம்பாள், புஷ்கலாம்பாள் சமேதராக, வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கிறார்.

  இங்கு குடமுழுக்கு விழா கடந்த 1979-ம் ஆண்டு நடந்தது. இந்த நிலையில் இங்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கோவிலில் உள்ளூர், வெளிநாடு வாழ் மக்களின் பெருமுயற்சியாலும், உபயதாரர்கள் உதவியுடனும் ரூ.3 கோடி செலவில் ஆகம முறைப்படி திருப்பணிகள் நடந்தன.

  இதைத்தொடர்ந்து வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை விநாயகர் வழிபாடும், மாலையில் லட்சுமி ஹோமமும் நடக்கிறது.

  யாக சாலை பூஜைகள் 8-ந் தேதி தொடங்குகிறது. அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 9-ந் தேதி 2-ம் கால யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. அன்று மாலை 3-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. 10-ந் தேதி காலை 9 மணி அளவில் 4-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. அன்று மாலை 5-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

  11-ந் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதைத்தொடர்ந்து 9.30 மணி அளவில் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. 10 மணிக்கு மூலஸ்தான மகா குடமுழுக்கும், 10.30 மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.

  இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள், வெளிநாடு வாழ் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×