
9-ம் நாளான நேற்று மதியம் 1.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஓம்சக்தி, பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தேரோட்டத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர்.