
இதன்படி கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள், ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்களின் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி நேற்று காலை கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. யாக சாலை பூஜைகள் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று புனித நீர் அடங்கிய கும்ப கலசங்கள் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருடசேவையுடன் வேத மந்திரங்கள் முழங்க கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராணி லெட்சுமி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் கலந்து கொள்ள வில்லை.