search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வீதியுலா இன்றி நிலைத்தேர் வைபவமாக நடைபெற்றதையும், திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தி்ல் காணலாம்
    X
    வீதியுலா இன்றி நிலைத்தேர் வைபவமாக நடைபெற்றதையும், திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தி்ல் காணலாம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் வீதியுலா இன்றி எளிமையாக நடைபெற்றது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்டம் வீதியுலா இன்றி நிலைத்தேர் வைபவமாக எளிமையாக நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை 11 நாட்கள் விழா நடைபெறுகிறது.

    தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன.

    விழாவையொட்டி 7-ம் திருநாளன்று உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். நேற்று முன்தினம் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்தநிலையில், தைத்தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. வழக்கமாக தேரோட்டத்தின்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைவார்.

    ஆனால் தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தேரோட்டத்திற்கு பதிலாக வீதியுலா இன்றி நிலைத்தேர் வைபவமாக நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தாயார் சன்னதி சென்றடைந்தார். இதில், கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(புதன்கிழமை) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×