search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாரிவேட்டைக்காக தேவநாத சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
    X
    பாரிவேட்டைக்காக தேவநாத சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாரிவேட்டை பக்தர்கள் இன்றி நடந்தது

    கோவில் மாடுகளை தேவநாதசுவாமி சுற்றி வந்து பாரிவேட்டை நடத்தியதுடன், மஞ்சள் நீர் தெளித்து அருள்புரிந்தார். இவ்விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 3-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. பின்னர் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடந்தது. மேலும் அன்று இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கியது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வருடந்தோறும் கணு தீர்த்தவாரி என்கிற பாரிவேட்டை விழாவில் பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி கெடிலம் ஆற்றுக்கு செல்வார். அங்கு கொம்புகளுக்கு வர்ணம் பூசி, வண்ண பலூன்கள் கட்டி கம்பீரமாக நிற்கக்கூடிய மாடுகளை விரட்டி மஞ்சள் தண்ணீர் தெளித்து அருள்புரிவார்.

    ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாட்டுப்பொங்கலையொட்டி தேவநாதசுவாமி கோவிலில் நேற்று கணு தீர்த்தவாரி பாரிவேட்டை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் ஆண்டாள், செங்கமலத்தாயார் கோவில் பின்புறத்தில் உள்ள கோபுர வாசலுக்கு வந்தடைந்தனர். பின்னர் கணு தீர்த்தவாரி உற்சவத்தில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதையடுத்து மாலையில் கோவில் உட்புறத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவில் மாடுகளை தேவநாதசுவாமி சுற்றி வந்து பாரிவேட்டை நடத்தியதுடன், மஞ்சள் நீர் தெளித்து அருள்புரிந்தார். தொடர்ந்து ராப்பத்து உற்சவம் நடைபெற்றது. இவ்விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    நாளை (திங்கட்கிழமை) சேஷ வாகன புறப்பாடு கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×