என் மலர்

  வழிபாடு

  நாகர்கோவில் நாகராஜாகோவிலில் தை திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
  X
  நாகர்கோவில் நாகராஜாகோவிலில் தை திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

  நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
  குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

  இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. பி.எஸ்.ஸ்ரீதரன் நம்பூதிரி கொடி மரத்துக்கு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க. மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், கணக்கர் சிதம்பரம், தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், தில்லைசெல்வம், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இதை தொடர்ந்து மங்கள இசை, கலையரங்கத்தில் திருவிளக்கு ஏற்றுதல், கடவுள் வாழ்த்து ஆகியவை நடந்தது. இரவில் புஷ்ப விமானத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேக பூஜை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 8 மணிக்கு சொல்லரங்கம் ஆகியவை நடக்கிறது.

  விழா நாட்களில் தினமும் சாமி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

  18-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மண்டகப்படி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆராட்டு, ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

  Next Story
  ×