என் மலர்

  வழிபாடு

  கர்னல் முனீஸ்வரர்
  X
  கர்னல் முனீஸ்வரர்

  ராயக்கோட்டையில் கர்னல் முனீஸ்வரர் கோவிலில் முப்பூஜை திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயக்கோட்டை கர்னல் முனீஸ்வரர் கோவில் முப்பூஜை திருவிழாவில் பூசாரி சுந்தரேச பிள்ளைக்கு அருள் வந்து, ஆட்டின் ரத்தத்தை குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.
  கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள கர்னல் முனீஸ்வரர் கோவிலில் 53-ம் ஆண்டு முப்பூஜை திருவிழா, சிறப்பு ஆராதனைகள் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், பால சண்டி ஹோமம், லட்சுமி, துர்கா, நவக்கிரக ஹோமங்கள், முனீஸ்வரர் ஹோமங்கள், அபிஷேகங்கள் நடந்தன.

  தொடா்ந்து நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது 15 ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த வழிபாட்டின் போது, பூசாரி சுந்தரேச பிள்ளைக்கு அருள் வந்து, ஆட்டின் ரத்தத்தை குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

  மேலும் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி முனீஸ்வரரை வழிபட்டனர்.
  Next Story
  ×