என் மலர்

  வழிபாடு

  நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது
  X
  நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது

  நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது. வருகிற 14-ந்தேதி கல் கருட சேவை தெப்ப திருவிழா நடக்கிறது.
  கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலவராகவும் உற்சவராகவும் கல்கருட பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்ப திருவிழா தொடங்கியது.

  முன்னதாக சீனிவாச பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 14-ந்தேதி கல் கருட சேவை தெப்ப திருவிழா நடக்கிறது.
  Next Story
  ×