என் மலர்

  வழிபாடு

  காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்
  X
  காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

  காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி 2-வது நாளை முன்னிட்டு மூலவருக்கு திருமஞ்சனம் முடித்து பரிவட்ட மரியாதை அளிக்கப்பட்டது.
  காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி 2-வது நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை மூலவருக்கு திருமஞ்சனம் முடித்து பரிவட்ட மரியாதை அளிக்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து ஸ்தலத்தார்கள், வேத வியாச ஸ்ரீதர பட்டர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி தமிழ் வேதமாகிய ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யபிரபந்த்தில் திருப்பல்லாண்டு, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெருமாள் திருமொழி மற்றும் பெரிய திருமொழி திவ்யப் பிரபந்த பாசுரங்கள் சேவித்து பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளாக தொடங்கி வைத்தனர்.

  அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன் திருவேங்கடம், ஹரி ராஜா ராமகிருஷ்ணன், ஆகியோர் மந்திர புஷ்பம், வேதம், அஷ்டோத்திரம் ஆகியவைகளை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. நேற்று 3-வது நாளாக பகல் பத்து உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிராசுதாரர்கள் முத்துசுவாமி, ஜெகநாதன், ஆனந்தன், கிருஷ்ணன். மற்றும் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×