என் மலர்

  வழிபாடு

  பகவதியம்மன்
  X
  பகவதியம்மன்

  கு.அய்யம்பாளையத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் தாலுகா கு.அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜை, வடிசோறு நிகழ்ச்சி நடந்தது.
  பரமத்திவேலூர் தாலுகா கு.அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா தொடங்கி நடந்தது. அதன்படி கம்பம் நடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜை, வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை காவிரியாற்றிக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர்‌ கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

  இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும்‌, இரவு வாணவேடிக்கையும்‌ நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதல், மதியம் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடல் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×