search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செந்துறை அருகே பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
    X
    செந்துறை அருகே பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

    செந்துறை அருகே பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

    மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில், ஐயப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில், 10-ம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி ஐயப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.இதைத்தொடர்ந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று முன்தினம் இருமுடி கட்டி அன்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கோவில் முன்பு இருந்து உலா தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக ஐயப்பன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதன்பிறகு ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

    முதலில் குருசாமி பூக்குழி இறங்க, அவரை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×