என் மலர்

  வழிபாடு

  அலகு குத்தி வந்த பக்தர்கள்
  X
  அலகு குத்தி வந்த பக்தர்கள்

  பெரியவலசு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியவலசு முத்துமாரியம்மன் கோவிலில் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
  ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரியவலசு பகுதியில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அன்று இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினமும் ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள்.

  நேற்று ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

  இன்றும் (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

  Next Story
  ×