search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை
    X
    பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை

    பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை

    பேசும் கன்னிமார் கோவிலில் 7 கன்னிமார்களுக்கும், தனித்தனியே மஞ்சள், செவ்வந்தி பூ மாலைகள் மற்றும் கதம்ப சர மாலைகள் அணிவிக்கப்பட்டது.
    காஞ்சரம்பேட்டை அருகில் உள்ள பாறைப்பட்டியில் மார்கழி மாத சர்வ அமாவாசையையொட்டி அங்குள்ள பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் 7 கன்னிமார்களுக்கும், தனித்தனியே மஞ்சள், செவ்வந்தி பூ மாலைகள் மற்றும் கதம்ப சர மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    நாட்டில் ஒமைக்ரான், கொரோனா தொற்றுகள் முழுமையாக அகல வேண்டியும், உலக நன்மைக்காகவும், கூட்டு வழிபாடு நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சன்னதி முன்புள்ள கன்னிமார் மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த விழா ஏற்பாடுகளை பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×