என் மலர்

  வழிபாடு

  பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
  X
  பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

  பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.
  பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.

  இதனால் பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், இடும்பன் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  கூட்டம் அதிகமாக இருந்ததால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதைகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மலைக்கோவிலில் தரிசன வழிகளை தாண்டியும் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
  Next Story
  ×