search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நடுவூர்க்கரை சிவசக்தி
    X
    நடுவூர்க்கரை சிவசக்தி

    நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று தொடங்குகிறது

    மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சிவசக்தி அம்மனுக்கு பூஜை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கான பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகக்குழு தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். 9 மணிக்கு சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியை மோகன்தாஸ் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சிவசக்தி பஜனை பட்டாபிஷேக குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×