என் மலர்

  வழிபாடு

  பொட்டல்குளம் அய்யன்மலை ஐயப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா
  X
  பொட்டல்குளம் அய்யன்மலை ஐயப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா

  பொட்டல்குளம் அய்யன்மலை ஐயப்பசாமி கோவிலில் மண்டல பூஜை விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டம் பொட்டல்குளம் அய்யன் மலை குபேர ஐயப்பசாமி கோவிலில் மண்டலபூஜையை முன்னிட்டு படிபூஜை, புஷ்பாபிஷேகம், பூக்குழி, அத்தாழ பூஜை, ஹரிவராசனம் ஆகியவை நடந்தது.
  குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொட்டல்குளம் அய்யன் மலை குபேர ஐயப்பசாமி கோவிலில் மண்டலபூஜை விழா நடந்தது. கேரளா சபரிமலையில் உள்ளது போல் அனைத்து அம்சங்களும் நிறைந்த இந்த கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து ஒரு மண்டலம் நிறைவடைந்ததை அடுத்து மண்டல பூஜை விழா நடைபெற்றது.

  விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், கலச பூஜை, அஷ்டாபிஷேகம், நெய்யபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை, சாயரட்சை தீபாராதனை இரவு படிபூஜை, புஷ்பாபிஷேகம், பூக்குழி, அத்தாழ பூஜை, ஹரிவராசனம் ஆகியவை நடந்தது.
  Next Story
  ×