என் மலர்

  வழிபாடு

  தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
  X
  தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

  தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் 21-ம் ஆண்டாக மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
  தொட்டியம் பகுதி தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் சார்பில் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் 21-ம் ஆண்டாக மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் மற்றும் பழ வகைகள் ஆகியவற்றால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

  பின்னர், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்களின் தவில், நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மாலை வெள்ளி ரத புறப்பாடு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழாக்குழுவின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
  Next Story
  ×